206
முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் ஐந்து வாடிகள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி இளைஞர் அணியினரின் ஒழுங்கமைப்பில் தியாகி அறக்கொடை நிறுவனம், மண் வாசனை அமைப்பு மற்றும் மனித நேயச் செயற்பட்டாளர்களின் உதவியுடன் மீளமைத்துப் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(16-09-2018) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தம்பிஐயா, முல்லை மாவட்டச் செயலாளரும், இளைஞர் அணியின் மத்திய குழு உறுப்பினருமான திலகநாதன் கிந்துஜன், முல்லைமாவட்ட அமைப்பாளர், இளைஞர் அணிச்செயற்பாட்டாளர் விஸ்ணு மற்றும் கட்சியின் முல்லை மாவட்டச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love