இந்தியா முழுவதிலுள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் கடந்த 10 ஆண்டுகளாக 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் சுமார் 6 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகள் எனவும் மீதியுள்ள சுமார் 17 லட்சம் வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 2.50 கோடிக்கு அதிகமாகும் எனவும் அவற்றில், 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளின் சதவீதம் 8.29 ஆகும் எனவும் தேசிய நீதி தகவல் தொகுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மாவட்டங் களில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களை அறிவதற்காக தேசிய நீதி தகவல் தொகுப்பு அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் மின்னணு வல்லுநர் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.