Home உலகம்தன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை

தன்சானியாவில் படகு விபத்து – குறைந்தது 44 பேர் பலி- பலரைக்காணவில்லை

by admin


தன்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில ஒரு படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  தன்சானியாவின் உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு குறித்த ஏரியினூடாக சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றமையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து குறித்த பகுதிக்குச் சென்ற மீட்புக்குழுவினர் நூற்றும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More