Home இலங்கைஇரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்

இரத்தினபுரியில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை – மக்கள் ஆர்ப்பாட்டம்

by admin


இஇரத்தினபுரி – கொலுவாவில – பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தனபால் விஜயரட்னம் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேற்படி இளைஞனை கொலை செய்த சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சில மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் சந்தேகநபரை உடனடியாக கைதுசெய்வதாக காவல்துறையினர் வழங்கிய உறுதியளித்ததையடுத்து ஆரப்பாட்டம் கைவிடப்பட்டது.மேலும் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More