150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை புதிய முறையில் விரைவில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் . இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை புதிய முறையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love