குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது நாட்டுப் பிரஜைகள் மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல மியன்மார் அரசாங்கம் தடை விதித்துள்ளது.ரொஹினிய முஸ்லிம்கள் பிரச்சினை காரணமாக இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வரும் நாடான மலேசியாவில், மியன்மார் பிரஜைகள் இனி வரும் காலங்களில் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மியன்மாரில் ரொஹினியா முஸ்லிம்களுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்படுவதனை மியன்மார் தலைவி ஆன்சான் சூகி வேடிக்கை பார்த்து வருவதாக மலேசிய பிரதமர் நாஜீப் ரசாக் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இனி மியன்மார் பிரஜைகளுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.