147
பாதசாரிகள் கடவை ஊடாக பாதையை கடக்க முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார். குருணாகல் – சிலாபம் பிரதான வீதியின் கொக்கவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மாதவாச்சி இராணுவ முகாமில் கடமையாற்றும் பிங்கிரிய பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கிங்ஸ்லி முனசிங்க எனும் இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love