155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சின் நான்கு மில்லியன் ரூபா செலவில் பரந்தன் நகரத்தில் புதிய பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை காலமும் பரந்த பேரூந்து நிலையம் தனியார் ஒருவரால் அமைக்கப்பட்ட கட்டடமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் போக்கு வரத்து அமைச்சின் நான்கு மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.
Spread the love