சர்வதேச காவற்துறை அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை (Meng u;ongwei) பதவி விலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார். சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் குற்றவியல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச காவற்துறையின் தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்ற அவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை விசாரணைக்காக சீன காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அவர் தனது பதவிவிலகலுக்கான கடிதத்தினை கையளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது