Home பிரதான செய்திகள் ஜப்பான் கிராண்ட்பிரி கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்

ஜப்பான் கிராண்ட்பிரி கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்

by admin


ஜப்பானில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton முதலிடத்தை பிடித்துள்ளார்.  இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போட்டியில் 17-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுஜூகா ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில் பந்தய தூரமான 307.471 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்டனர்.

இதன்போது ஹமில்டன் 1 மணி 27 நிமிடம் 17.062 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து, அதற்கான 25 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்’த பருவகாரத்தில் அவர் பெற்ற 9வது வெற்றி இதுவாகும்.  மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாக வந்துள்ளார்.

இதுவரை நடந்துள்ள 17 சுற்றுக்களின் முடிவின் படி ஹமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்திலும் வெட்டல் 264 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 207 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 18-வது சுற்று போட்டி அமெரிக்காவில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More