குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்கு அலப்போவில் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து வெளியே நூற்றுக் கணக்கானவர்களை காணவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை காரியாலயம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த நபர்கள் அரசாங்கப் படையினரிடம் சிக்கியிருக்கக் கூடும் எனவும் அவர்களின் நிலைமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில்லி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கைதுகள் தடுத்து வைத்தல் சமப்வங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். 30 முதல் 50 வயது வரையிலான பெரும் எண்ணிக்கையிலான ஆண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கிழக்கு அலப்போவின் 85 வீதமான பகுதியை சிரிய அரச படையினர் மீட்டுள்ளனர்.