Home இலங்கைதோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

by admin
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 
அந்தவகையில், பத்தனை திம்புள்ள தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் சம்பள உயர்வு வேண்டும் என கோரி தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 
 
ஆர்ப்பாட்டத்தின் போது கறுப்பு கொடியையும் சுலோகங்களையும்  ஏந்தி  கோசங்களை எழுப்பியவாறு சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். 
 
தமக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதாக கூறிய தொழிற்சங்க சம்மேளம் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி, 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத் தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More