187
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளடன் மேலும் 10 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இன்று காலை 11 மணி அளவில் எதிர்பாரத வகையில் ஆலையில் உள்ள எரிவாயுக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதனை தொடர்ந்து ஆலைக்குள் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டு;ளளது
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்திய புகையிரத திணைக்களத்துக்குத் தேவையான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love