Home இலங்கைஜனாதிபதி கொலைச் சதி, சசி வீரவன்சவை, CID விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது….

ஜனாதிபதி கொலைச் சதி, சசி வீரவன்சவை, CID விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது….

by admin


ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை சிஐடியினர் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் தான் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்சவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அவ்வேளை விமல்வீரவன்சவின் மனைவியை சந்தித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து உள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More