இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பரின் பதவி பறிக்கப்படலாம் என பாஜக வட்டராங்கள் தெரிவித்துள்ளன. எம்.ஜே.அக்பர் மீது சிஎன்என் பெண் செய்தியாளர் ஒருவர் உட்பட சில பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் முறைப்பாடு வழங்கியுள்ள நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் தரப்பிலோ, மத்திய அரசு தரப்பிலோ எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எம் ஜே.அக்பர் இன்று டெல்லி திரும்பவுள்ளார்.
இந்தநிலையில் அமைச்சர் அக்பர் மீதான பாலியல் முறைப்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தமையினால் அவர் இனிமேலும் அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிதான் இறுதி முடிவு எடுப்பார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பத்திரிகையாளரான எம்.ஜே.அக்பர் பல்வேறு ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது