பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொடகமவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொது எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவதில் ஐக்கியதேசிய கட்சியே அதிக ஆர்வத்துடன் காணப்படுகின்றது எனவும் ஐக்கியதேசிய கட்சி இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் தனது தலைவர் போட்டிபோடுவதற்கு அனுமதிக்காத கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கவலைப்படாமல் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான சரியான தந்திரோபாயங்களை பொது எதிரணி முன்வைக்கவேண்டும் என்பதே முக்கியமானது எனவும் அதவர் தெரிவித்துள்ளார்.உரிய தந்திரோபாயங்களை முன்வைக்கும் பட்சத்தில் எதிர்தரப்பு வேட்பாளர் யாராகயிருந்தாலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.