ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என அர்த்தப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.
ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தப்படாது. அது ஒற்றையாட்சி என்பதே உண்மையாகும். ஆனால் ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என அர்த்தப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அக்கட்சி யின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
புதிய அரசி யலமைப்புக்கான வழிநடத்தல் குழு கூட்டம் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் நடைபெற்றிருந்தது. இதன்போது புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என்பது அர்த்தமல்ல. உண்மையில் ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியே. இது தமிழ் மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் எனவும் நான் கூறியிருந்தேன்.
அதனை ஏற்றுக் கொண்டு டக்ளஸ் தேவானந்தா கூறுவதில் நியாயம் இருக்கின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஆனால் எதிர்கட்சித்த லைவர் இரா.சம்பந்தன் என்னை கேட்கிறார் நாட்டை பிரிக்கபோகிறீர்களா? நாட்டை குழப்பப் போகிறீர்களா? என நான் அவரிடம் திருப்பி கேட்டேன்.
நான் மக்களை உசுப்பேத்தவில்லை. நீங்கள்தான் மக்களை உசுப்பேத்தினீர்கள். எதற்காக மக்களை உசுப்பேத்தினீர்கள்? எனக் கேட்டேன். அப்போது பிரதமர் ரணில் தலையிட்டு தமிழ் மொழி தெரியாவிட்டாலும் ஏதோ பிரச்சினை உள்ளது. என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். ஆகவே தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களை அழைத்து பேசி தீர்மானிக்கலாம் என கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் ஊடகங்கள் ஒருபக்க கருத்துக்களை மட்டும் செய்தியாக்குகின்றன. ஆனால் எங்களுடைய பக்கத்தில் உள்ள கருத்துக்களை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை என்றார்.
தொடர்ந்து புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது. இந்த கேள்விக்கு என்னுடைய பதில் வரும்.. ஆனால் வராது.. என்பதே என கூறிய டக்ளஸ் தேவானந்தா புதிய அரசியலமைப்பு அரசியலமைப்பு சபைக்கு வரும். அதற்கு அப்பால் வராது என்றார்
1 comment
தமிழ் மக்கள் பல தரப்பினரதும், ‘நிபந்தனையுடனான ஒத்துளைப்பு’, என்ற, என்றோ முன்வைத்திருக்க வேண்டிய கோரிக்கையை, பாதிக் கிணறு தாண்டிட பின், இன்று முன்வைப்பதில் இருக்கும் சிரமங்களை TNA யினர் இன்று உணர்கின்றார்கள், என்பது புரிகின்றது. மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது அவர்கள் தவிக்கின்றார்கள், என்பதே உண்மை.
புதியதொரு அரசியலமைப்பு உருவாகும் சாத்தியங்கள் இல்லையென்றே கூறலாம். ஓரிரு தமிழ்த் தலைவர்களின் முன்யோசனையற்ற நடவடிக்கைகளால் முழுத் தமிழினமுமே பாதிப்புக்குள்ளாவதை யாராலும் ஜீரணிக்க முடியாது. சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரினதும் அணுகுமுறைகள் எப்படி இருந்தன, என்பதை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், எமது இனம் எப்படியெல்லாம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது, என்பது புரியும். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. ‘புத்திசாதுரியமாகச் சிந்தித்து ஒவ்வொரு அடியையும் அவதானமாக முன்வையுங்கள்’, என்பதே, எமது கோரிக்கையாகும்.