Home இலங்கை 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…

18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…

by admin

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடிக்கை என்றும், இது தொடர்பில், 1929 என்ற இலக்கத்துக்கு முறையிட்டால், சட்டநடவடிக்கை எடுப்பதாகவும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 16, 2018 - 7:22 pm

Yes it’s correct. Below the 18 yrs of age non of those students or els kids would not engaged in over any protest due to the fact that they have not yet to be learn the any kind of Political or els other environmental factors than those mature adults. There those kids would be refrain from all those protest. In fact those days Sri Lankan civil war arena those militia faction always targeted the school kids to engaged in other way most of those kids were recruited as their carders at large died in those battle fields. There the past lesson was there in Sri Lankan history not repeated in any cost or els manner at large. May God bless mother Sri Lanka,

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More