Home இலங்கை கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….

கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் (17.10.18) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 17-09-2018 அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மகப்பேற்ற வைத்திய நிபுணர் டி.எல்.டபிள்யூ.குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு மகப்பேற்றியல் நிபுணர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வைத்திய கலாநிதி எம்.ஆர். விதானதந்திரிகே இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நியமனத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்றியல் நிபுணர்கள் கடமையில் இருப்பார்கள் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 16, 2018 - 7:14 pm

I appreciate that in those northern places Shinhales doctors has to be posted. Not only them as those shinhales nurses as well would be muslim nurses or doctors would be posted in those areas than in their native places in southern or western parts of Sri Lanka. Where that brings bit of amelioration as well conciliatory situation in Sri Lankan than before. In other way most of those tamil origin doctors nurses or other most of all co staff would be posted in western, southern parts of Sri Lankan hospitals where even shinhales or muslim majority areas for their services to be rendered. Which bring quite amicable balance as well bit brings down the doctors or nurses private practices at large in those private own hospitals. In more all Sri Lankan community would understand each other in well balances manner. May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More