Home பிரதான செய்திகள்மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு இரு போட்டிகளில் பங்கேற்க தடை

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு இரு போட்டிகளில் பங்கேற்க தடை

by admin


மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லோ(Stuart Law ) வுக்கு இரு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் விதிமுறையை மீறியதாக தெரிவித்து அவருக்கு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன் தடைக்கான மூன்று புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது நடுவரை நோக்கி தகாத வார்த்தைகள் பேசியமைக்காகவே ஐசிசி அவருக்கு இவ்வாறு தடைவிதித்துள்ளது. இதனால் ஸ்டூவர்ட் லோ இந்தியாவிற்கு எதிராக 21 மற்றும் 24 ஆம் திகதி நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More