துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மத்திய பகுதியில் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை அதிகாரிகள் ஆவர்.
கால்பந்து ஆட்டம் முடிந்த ஒரு மணி நேரத்தின் மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலவர தடுப்பு காவல்துறையினரின் வாகனத்தை குறி வைத்து முதல் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
சற்று நேரம் கழித்து அருகாமையில் இருந்த பூங்காவில், தற்கொலைக் குண்டுதாக்குதல் இடம்டபெற்றுள்ளது. இதனையடுத்து துப்பாக்கிப்பிரயோக சத்தமும் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து, குர்திய பிரிவினைவாதிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. 16 மாதங்களுக்கு முன்பு தங்களது போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததிலிருந்து, பாதுகாப்பு படையினரை குறி வைத்து அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.