எம்.ஜி.ஆர். நினைவிட பெயரை மாற்றம் செய்யவும் ஜெயலலிதாவின் திருவுருப் படத்தை சட்டசபையில் வைக்கவும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இடம்பெற்ற போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆதில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பதற்கும், அவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைப்பதற்கு மைய அரசிடம் கோருவதற்கும்,
அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் பதினைந்து கோடி ரூபாய் பெறுமதியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை ‘பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம்’ என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.