இலங்கை பிரதான செய்திகள்

பிணை முறி மோசடி குறித்து அடுத்த மாதம் பாராளுமன்றில் விவாதம் – ஒற்­றை­யாட்­சி மூலம் ­ச­மஷ்­டி பண்­பு­களை பெற கூட்டமைப்பு முன்வரவேண்டும் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிணை முறி மோசடிகள் தொடர்பில் அடுத்த மாதம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக மட்டுமே குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிணை முறி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

ஒற்­றை­யாட்­சி மூலம் ­ச­மஷ்­டி பண்­பு­களை பெற கூட்டமைப்பு முன்வரவேண்டும்! டிலான் பெரேரா

நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு சிறந்­த­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கி­றது.அந்த சந்­தர்ப்­பத்தில் உச்­ச­பட்ச பயனை அடை­ய­வேண்­டு­மானால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வைப் பெறு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

தற்­போது இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் மஞ்சள் நிற சமிக்ஞை ஒளித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அந்த மஞ்சள் நிறத்தை பச்­சை­நி­ற­மாக மாற்­று­வ­தற்கு ஜனா­தி­பதி தயா­ராக இருக்­கிறார். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கினால் மட்­டுமே இது சாத்­தி­ய­மாகும் என்றும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

கிடைக்­காது என்று தெரி­கின்ற ஒரு விட­யத்­திற்­காக காத்­தி­ருப்­பதை விட கிடைக்­கக்­கூ­டிய விட­யத்தை வேறு ஒரு வடி­வத்தில் பெற்­றுக்­கொள்­வதில் தவ­றில்லை என்றே நான் கரு­து­கின்றேன் எனவும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் சமஷ்டி முறை­மையா? ஒற்­றை­யாட்சி முறை­மையா என்ற வாத விவா­தங்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அது­தொ­டர்பில் தகவல் வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா மேலும் குறிப்­பி­டு­கையில்:-

மிக நீண்­ட­கா­லத்­திற்குப் பின்னர் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான பஸ் ஒன்று வந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. அதுவே இருக்­கின்ற இறுதி பஸ்­ஸாகும். இந்த பஸ்ஸை கைவிட்­டோ­மானால் எமது பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யாமல் போய்­விடும். எனவே எந்த முயற்­சி­யா­வது மேற்­கொண்டு இந்த இறுதி பஸ்ஸில் ஏறிக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தற்­போது இனப்­பி­ரச்­சினை தீர்­வா­னது சமஷ்டி முறை­மை­யிலா அல்­லது ஒற்­றை­யாட்சி முறை­மை­யிலா அமை­ய­வேண்டும் என்­பது தொடர்பில் பாரிய ஒரு விவா­தமே நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த இடத்தில் சில விட­யங்­க­ளையும் அது­தொ­டர்­பான யதார்த்­தத்­தையும் நாம் புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் சமஷ்டி என்ற சொற்­பி­ர­யோ­கத்தில் மக்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

அதா­வது எக்­கா­ரணம் கொண்டும் சமஷ்டி முறை­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற கடு­மை­யான தீவி­ர­மான நிலைப்­பாட்டில் பெரும்­பான்மை மக்கள் காணப்­ப­டு­கின்­றனர். தனிப்­பட்ட முறையில் நான் சமஷ்டி முறை­மை­யி­லான தீர்வை பாரிய விருப்­பத்­துடன் ஆத­ரிக்­கின்றேன். ஆனால் சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் என்ற வகையில் நான் அதனை கூற மாட்டேன்.

காரணம் பெரும்­பான்­மை­யான மக்கள் என்ன கூறு­கின்­றார்­களோ அத­னையே நான் கூற முடியும். எனவே இந்த இடத்தில் எமக்கு ஒரு தெரிவு இருக்­கின்­றது. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது இந்த விட­யத்தில் ஒரு பாரிய வகி­பா­கத்தை மேற்­கொள்­ள­வேண்­டிய தேவை உள்­ளது.

தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் சிங்­கள மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்றார். அவ்­வாறு சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு அவ­சியம் என்­பது யதார்த்­த­மாகும். அதற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஒரு விட­யத்தை செய்­ய­வேண்­டி­யுள்­ளது. தாம் ஒற்­றை­யாட்­சியின் கீழ் பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வை பெற்­றுக்­கொள்ள தயார் என்­பதை கூட்­ட­மைப்பு நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­க­வேண்டும்.

அந்த செய்­தி­யா­னது பெரும்­பான்மை மக்­க­ளிடம் செல்ல வேண்டும். அவ்­வாறு கூட்­ட­மைப்பு சமஷ்டி என்ற சொற்­பி­ர­யோ­கத்தில் மட்டும் தங்­கி­யி­ருக்­காது சமஷ்டி முறை­மை­களின் பண்­பு­களைக் கொண்ட தீர்­வுத்­திட்­டத்தை ஒற்­றை­யாட்­சியின் ஊடாக பெற்­றுக்­கொள்ள முன்­வ­ர­வேண்டும். சமஷ்டி என்ற வச­னத்தை முன்­வைத்து தீர்வுத் திட்­டத்தை இழந்­து­விடும் அபா­யத்தை நெருங்­கு­வ­தை­விட ஒற்­றை­யாட்சி என்ற வச­னத்தை முன்­வைத்து காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் பெற்று ஒத்­தி­சை­வுப்­பட்­டி­யலை நீக்­கிக்­கொள்­வது பய­னுள்­ளது என்­பதே எனது நிலைப்­பா­டாகும். எங்­க­ளது கட்­சியின் சார்­பிலும் அத­னையே வலி­யு­றுத்­து­கிறோம்.

சமஷ்டி என்­பது பாரிய சிக்­க­லுக்­கு­ரிய வார்த்தைப் பிர­யோ­க­மாக மாறி­யுள்­ளது. இதனை மாற்­று­வது என்­பது தற்­போதை அர­சியல் கள­நி­லை­மையில் மிகவும் கடி­ன­மா­ன­தாகும். சமஷ்டி என்­பது நாட்டை பிரிக்­காது என்ற விட­யத்தை என்­னைப்­போன்ற மித­வாதப் போக்­கு­டையோர் எவ்­வ­ள­வுதான் வலி­யு­றுத்­தி­னாலும், பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் அந்தக் கருத்தை இசை­வாக்கம் செய்­வது மிகவும் கடினமாகும்.

எனவே தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒற்றையாட்சி முறைமை ஊடாகவேனும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வதே யதார்த்தமானதாக அமையும். இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு புரிந்துகொள்ளுமென நாங்கள் நம்புகிறோம். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் கோரிக்கை எவ்வாறானதென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் கிடைக்காது என்று தெரிகின்ற ஒரு விடயத்திற்காக காத்திருப்பதை விட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு ஒரு வடிவத்தில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap