இலங்கை பிரதான செய்திகள்

எனது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவில்லை – நாமல் ராஜபக்ஸ

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் தமது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என  நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் காவல்துறை மா அதிபர் விசாரணை நடத்துவதில்லை எனவும், மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் , தமக்கு ஒர் காதலி கிடையாது எனவும் இதனால் அண்மையில் வீதிப் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட எதிர்க்கட்சியின் பாராளுன்ற உறுப்பினர் ஒருவரின் புதல்வி தமது காதலி கிடையாது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.