குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள இனவாதம் தூண்டப்படுவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் இனவாத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் சம உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதன் ஊடாகவே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment