குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

டியூனிசியாவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டியூனிசிய பாராளுமன்றில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டியூனிசிய பிரதமர் Habib Essidக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமைரை பதவி நீக்க வேண்டுமென 188 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், 3 பேர் மட்டும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரதமர் Habib Essid கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையில்லாப் பிரச்சினை பொருளாதார நெருக்கடி என நாட்டில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடி நிலைமைகளினால் மக்கள், அரசாங்கம் மீது கடும் அதிருப்தி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment