இலங்கை

தஹாம் சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கொழும்பு
thkam-sirisena

ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேனவிற்கு எதிராக முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் கலகம் செய்ததாக ஜனாதிபதியின் புதல்வர் மற்றும் சகாக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் காவல் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும் இவ்வாறான ஓர் பின்னணியில் காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஹாம் சிறிசேன உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக முன்னதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது எனினும், சம்பவத்துடன் தஹாம் சிறிசேன தொடர்புபடவில்லை என பின்னர் கேளிக்கை விடுதி நிர்வாகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply