இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசியல் சாசனம் தொடர்பான எமது பொறுப்புக்களில் 90 வீதம் பூர்த்தி – TNA

sumanthiran
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் சாசனம் தொடர்பான தமது பொறுப்புக்களில் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி புதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்த பாராளுமன்ற இணைக் குழுக்களின் பணிகளும் பாரியளவில் பூர்த்தியாகியுள்ளதாகவும் குழுக்களினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் சில அரசியல் கட்சிகள் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கூடுமென  தெரிவித்துள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தை அமைக்கும் பணிகளில் தமது பங்களிப்பு காத்திரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.