இலங்கை பிரதான செய்திகள்

யாழினில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நாளைஆர்ப்பாட்டம்!

14632827_1378467532181279_1811424914854104900_n
படுகொலையான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16வது ஆண்டு நினைவு நாளான நாளை புதன்கிழமை ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
படுகொலையான மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியார்களிற்கு சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையினில் காலதாமதமின்றிய விசாரணை!
-ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல்!
தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல்!
ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளினை முன்னிறுத்தி வடக்கு –கிழக்கிலுள்ள அனைத்து ஊடக அமைப்புக்களும் அணிதிரண்டு இப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
முன்னதாக காலை 10 மணியளவினில் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியினில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.தென்னிலங்கையை சேர்ந்த ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு மற்றும் சிவில் சமூக அமையம்,அரசியல் கட்சிகள் என பல தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கி இன்றைய போராட்டத்தினில் பங்கெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.ஊடக சுதந்திரத்திற்கான ஆர்ப்பாட்டத்தினில் அனைத்து தரப்பினரையும் அணிதிரள அழைப்பு விடுப்பதாக யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers