இலங்கை

மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கான உடன்படிக்கை கைச்சாத்திப்பட்டுள்ளது

அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கான உடன்படிக்கை இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டதென ஜனாதிபதி செயலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
china-srilanka
அத்திட்டத்துக்கான நிர்மாண ஒப்பந்ததாரரான சீனாவின் CAME பொறியியல் கம்பனியின் தலைவி Luo Yan  அம்மையார் மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன ஆகியோருக்கிடையில் இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

சீன எக்சிம் வங்கியின் நூற்றுக்கு நூறுவீத கடனுதவியில் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் செலவு மதிப்பீடு 6969 மில்லியன் ரூபா ஆகும்.  எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இத் திட்டத்தின் வேலைகள் 2020 நிறைவு செய்யப்பட்டு மக்களுக்கு உரித்தளிக்கப்பட்டதென ஜனாதிபதி செயலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply