178
இந்தியாவின் வாரணாசி நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இரட்டை மாடி வீடு ஒன்றில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் அந்த வீட்டில் வசித்த 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுமதி பெறப்படாமல் அதிகமான பட்டாசுகளை வீட்டினுள் சேமித்து வைத்திருந்தமையே இந்த விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love