இலங்கை பிரதான செய்திகள்

இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் – மஹிந்த

mahintha rajapaksha12_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியல் சாசனம் ஒன்றின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றது என  குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

சூரியவௌ பிரதேசத்தில் நடபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற் திட்டங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் யாழ்ப்பாணத்திற்கு தொடர்ந்தும் செல்லக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • ‘இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும்’, எனக் கூறிப் பச்சை இனவாதம் பேசும் அதிகார/ பதவி வெறி பிடித்த திரு. மகிந்த ராஜபக்ஷ போன்ற அரக்க குணம் படைத்தவர்கள் அரசியலில் இருக்கின்ற வரையில், எவராலும் நல்லாட்சி செய்ய முடியாது! எனவே, நல்லாட்சிக் கனவில் மிதக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், மோசடி மற்றும் ஊழல்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டால் மட்டும் போதாது! குற்றவாளிகளை உரிய வகையில் தண்டிப்பதன் மூலம் நல்லாட்சியை மட்டுமல்ல, நாட்டையும் அமைதிப் பூங்காவாக ஆக்க முடியும்! வேண்டியது
    எல்லாம் எழுத்தில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதுதான்! சிந்திப்பார்களா?