1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அரசாங்கம் திருடர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் தற்போதைய அரசாங்க ஆட்சிக் காலத்திலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் மோசடியாளர்கள், குற்றவாளிகளை பாதுகாக்கும் பாதுகாப்பு வலயத்தை உடைத்தெறிய மக்கள் சக்தியொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love