இலங்கை பிரதான செய்திகள்

ஹாவா குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது – ராஜித

rajitha

வடக்கை அச்சுறுத்தும் ஹாவா குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு ஏற்ப அவருக்கு  தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். அக் காலப் பகுதியில் இருந்த வேறு சில தமிழ் குழுக்களை அழிக்க இந்தக் குழு உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தற்போது இந்தக்குழு வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.