குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தெற்கின் இனவாதிகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கும், தெற்கின் இனவாதத்திற்கும் இடையில் வித்தியாசம் எதுவும் கிடையாது எனவும் இரு தரப்பிற்கும் அழிவினை ஏற்படுத்தும் நோக்கமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹாவா குழுவுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு உண்டா என்பதனை தாம் உறுதிபடக் கூற முடியாது எனவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஹாவா குழுவின் பின்னணியில் கடும்போக்குவாத அமைப்பு ஒன்றே செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment