இலங்கை பிரதான செய்திகள்

நடராஜா ரவிராஜ் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

15032908_551950428344737_1974683094873831844_n

2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆசிரியர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றினர்.

கட்சியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்ததுடன்  கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்களும் மாமனிதருக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மற்றும்  அரசியல் ஆய்வாளர் சி.ஜோதிலிங்கம்  ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினர். கட்சியின் நல்லூர் கோட்ட இளைஞர் அணித்தலைவர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வு மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி 6.30 மணியளவில் நிறைவு பெற்றது.

14937198_551950311678082_1248729188987877476_n 14938239_551950565011390_3480478638407561675_n 14955926_551952115011235_875972771075505252_n 14963162_551950665011380_3071446192652822915_n  15027785_551950611678052_3386189456223383623_n 15032908_551950428344737_1974683094873831844_n 15036672_551952075011239_8154910821645364238_n

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap