இலங்கை பிரதான செய்திகள்

நீதி அமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் பேரவை எதிர்ப்பு

slma
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் கருத்துக்கு முஸ்லிம் பேரவை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் 32 பேர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்த சில சக்திகள் காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் நீதி அமைச்சர் இவ்வாறான கருத்து வெளியிட்டமை வருத்தமளிப்பதாக பேரவையின் தலைவர் அமீன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை உருவாக்கியுள்ளதாகவும் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சரின் கருத்து வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply