சிலி மற்றும் அர்ஜென்டினாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் சான்ஜியான் நகரில் இருந்து தென் மேற்கில் பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை எனவும் சிலி மற்றும் அர்ஜென்டினா நாடுகள் தெரிவித்துள்ளன.
Spread the love
Add Comment