உலகம் பிரதான செய்திகள்

இஸ்ரேலில் காட்டுத்தீ காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Fire fighters try to extinguish a forest fire which broke out in the forest near the Nataf nature reserve, outside of Jerusalem on November 23, 2016. Photo by Yonatan Sindel/Flash90

இஸ்ரேலில்  ஜெருசலேம் அருகே மேற்கு கரையில் உள்ள 3வது மிகப் பெரிய நகரமான ஹைபா நகரை அண்மித்துள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த தீயை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பல வீடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்  அங்கு பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன்  தீ மற்றும் புகை காரணமாக சுமார் 130 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

isrel2

இதேவேளை இந்த காட்டுத்தீக்கு பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்  காரணமாக இருக்கலாம் என இஸ்ரேலிய அரசாங்கம்  தெரிவித்துள்ள நிலையில் இந்த தீயை வைத்துள்ளனர்  என்ற  சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாக  அந்நாட்டு காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap