இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
srilanka-maldeives-foreign-ministers

இலங்கை மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் டொக்டர் மொஹமட் அசீம் ஆகியோருக்கு இடையிலேயே  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள மாலை தீவு அமைச்சர் வெளிவிவகார அமைச்சில், அமைச்சர் சமரவீரவை சந்தித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு உள்ளித்த துறைகளில் உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.