குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்ப அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கம் ஆட்சி வகித்த காலத்தில் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இனி ஒப்படைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்படையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment