இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ravi
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக மஹிந்த ராஜபக்ஸ சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் நாட்டை கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் ஆகியன ஆரம்பிக்கப்பட்ட போது கூறப்பட்ட செலவுகளை விடவும் ஒரு மடங்கு அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது எனவும் இதனால் அரசாங்கத்தின் வருமானம் கிரமமான முறையில் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பாரியளவில் செலவிடப்பட்ட போதிலும், அதன் ஊடாக மிகவும் சொற்பளவான வருமானமே கிடைக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மத்திய வங்கியை அரசாங்கம் தனியார் மயப்படுத்த உள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும்; தெரிவித்துள்ளார்.
சில தொழிற்சங்கங்களும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.