இலங்கை பிரதான செய்திகள்

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
champa-patel-amnasty-international
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சித்திரவதைகளை தடுப்பதற்கும், சித்திரவதைகளில் ஈடுபடுவோர் குறித்து கிரமமான விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை விதிக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தென் ஆசிய பணிப்பாளர் சம்பா படேல்  தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சில முக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ள அவர் எவ்வாறெனினும் சித்திரவதைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்ந்தும் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap