பிரதான செய்திகள் விளையாட்டு

முதல் இருபதுக்கு20 போட்டியில் இலங்கை தோல்வி

குளோபல் தமிழ்ச் செய்திகள்


தென் ஆபிரிக்காவிற்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை  அணி தோல்வியடைந்துள்ளது.  இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் சென்சூரியன் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தப் போட்டி, மழை காரணமாக 10 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டது.  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 10 ஓவர்களில் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap