பிரதான செய்திகள் விளையாட்டு

ஸ்ரீசாந்துக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க பி.சி.சி.ஐ. மறுப்பு

ஐ.பி.எல். சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீPசாந்துக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு  ஸ்ரீPசாந்த் ஐ.பி.எல். போட்டியின்போது  ஆட்டநிர்ணய சதியில்  ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டமையினால் பி.சி.சி.ஐ. ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது.

நீதிமன்ற விசாரணை அடிப்படையில்  2015-ல் ஸ்ரீசாந்த் விடுதலை செய்யப்பட்ட போதும்  பி.சி.சி.ஐ. அவர் மீதான தடையை நீக்கவில்லை.  இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னோட்டமாக ஸெ;காட்லாந்து கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக பி.சி.சி.ஐ.யிடம் தடையில்லாத சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததாகவும்  எனினும் பி.சி.சி.ஐ. அவருக்கு தடையில்லாத சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீசாந்த் இந்திய தேசிய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 , டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap