பிரதான செய்திகள் விளையாட்டு

கௌரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்த ராகுல் ட்ராவிட்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் கௌரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்துள்ளார்.பெங்களுர் பல்கலைக்கழகமொன்று ட்ராவிட்டிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க தீர்மானித்திருந்து. பல்கலைக்கழகத்தின் 52ம் பட்டமளிப்பு விழாவில் இவ்வாறு ட்ராவிட் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவிருந்தார்.

எனினும் தமக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்க வேண்டாம் எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ட்ராவிட் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.

கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்வதில்  தமக்கு உடன்பாடு கிடையாது எனவும், விளையாட்டுத்துறை தொடர்பில் ஆய்வு நடத்தி அதன் ஊடாகவே பட்டமொன்றை பெற்றுக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக ட்ராவிட் கிரிக்கட் வரலாற்றில் அழியா புகழ் பெற்றுக்கொண்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap