முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணிக்கம்- கணேஷ் என்பவரே இவ்வாறு திடீர் சுகயீனத்திற்கு உள்ளானார். இதனையடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த நாட்களாக, தீர்வுகள் எதுவும் கிடைக்காத நிலையில், முல்லைத்தீவு கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாபிலவு-பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் திரு மாணிக்கம்- கணேஷ் திடீர் சுகயீனம் காரணமாக நோய் காவு வண்டி மூலம் மாஞ்சோலையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Posted by Peter Ilancheliyan on Friday, 3 February 2017
வீடியோ – Peter Ilancheliyan

Add Comment