இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரதினம் தமிழர்களுக்கு துக்கதினம் எனும் கோசத்துடன் யாழில் போராட்டம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சுதந்திர தினமான இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடு , தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் , ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டும், காணி சுவீகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை தேவை, ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டம் முன்னேடுக்கபப்ட்டது.

குறித்த போராட்டத்தில் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , அனந்தி சசிதரன் மற்றும் க.சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் வலிந்து காணாமல் ஆக்கபப்ட்ட உறவினர்களுடன் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.