குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்வாறு குற்றச் செயல்கள் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என சுதந்திரக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love
Add Comment