இலங்கை பிரதான செய்திகள்

ஜாலிய விக்ரமசூரிய தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்று இன்றைய தினம் மேல் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பிற்கு மத்தியில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்ற நீதவான் நிசாங்க பந்துல கருணாரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்த மனு எதிர்வரும் 28ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply